ADDED : நவ 02, 2024 08:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
--தேவதானப்பட்டி, நவ. 2----
தேவதானப்பட்டி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த முஸ்தபா மனைவி ஆயிஷாபீவி 75. தனியாக வசித்து வருகிறார்.தேவதானப்பட்டி பகுதியில் நேற்று சாரல் மழையும் பெய்தது. மாலையில் வீட்டின் ஒரு பக்க சுவர் ஆயிஷாபீவி மீது விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பெரியகுளம் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனி தலைமையில் வீரர்கள் சுவர் இடிபாடுகளை அகற்றி உடலை மீட்டனர்.
தாசில்தார் மருதுபாண்டி, தேவதானப்பட்டி ஆர்.ஐ., தமிழ்செல்வி பார்வையிட்டனர். தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.--