/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோயில்கள் சிறப்பு பூஜை பொதுமக்கள் வரிசையில் சென்று தரிசனம் செய்தனர்
/
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோயில்கள் சிறப்பு பூஜை பொதுமக்கள் வரிசையில் சென்று தரிசனம் செய்தனர்
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோயில்கள் சிறப்பு பூஜை பொதுமக்கள் வரிசையில் சென்று தரிசனம் செய்தனர்
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோயில்கள் சிறப்பு பூஜை பொதுமக்கள் வரிசையில் சென்று தரிசனம் செய்தனர்
ADDED : ஜன 02, 2024 06:13 AM

தேனி: மாவட்டத்தில் ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் நடந்த சிறப்பு பூஜைகளில் பொதுமக்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.
வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை முதல் பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள், ஐயப்ப பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தேனி பெத்தாட்சி விநாயகர் கோயிலில் மலர் அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். பெரியகுளம் ரோடு வெற்றிக்கொம்பன் விநாயகர் கோயில், வேல்முருகன் கோயில், என்.ஆர்.டி., நகர் சிவகணேச கந்தபெருமாள் கோயில், மதுரை ரோடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்களில் பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகங்கள் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
கம்பம்: - கம்பம் கம்பராயப்பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பெண்கள், தங்கள் கணவர், குழந்தைகளின் நட்சத்திரம், ராசிகளை கூறி அர்ச்சனைகள் செய்தனர். பொதுமக்கள் ஒருவருக்கொருவர் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். கவுமாரியம்மன் கோயில், வேலப்பர் கோயில்களிலும் கூட்டம் அலைமோதியது.
உத்தமபாளையம்: காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில், யோகநரசிங்க பெருமாள் கோயில், சின்னமனூர் சிவகாமியம்மன் கோயில், பெருமாள் கோயில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
பெரியகுளம்: பாலசுப்பிரமணியர் கோயிலில் பாலசுப்பிரமணியர், ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். இரு சன்னதிகளிலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வரதராஜப் பெருமாள் கோயில், கவுமாரியம்மன், கம்பம் ரோடு காளியம்மன், கைலாசபட்டி கைலாசநாதர், பெரியநாயகி அம்மன், பாலசாஸ்தா, வரசித்தி விநாயகர், வீச்சு கருப்பணசாமி, சங்கவிநாயகர், தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் கோயில் உட்பட ஏராளமான கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
கூடலுார்: கூடல் சுந்தரவேலவர் கோயிலில் அபிஷேகம் ஆராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கூடலழகிய பெருமாள் கோயிலில் மார்கழி மாத சிறப்பு பூஜை நடந்தன. அதிகாலையில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். குமுளி மலைப்பாதையில் உள்ள வழிவிடும் முருகன் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர்.
ஆண்டிபட்டி:சக்கம்பட்டி நன்மை தருவார் ஐயப்ப சுவாமி கோயிலில் ஐயப்ப பக்தர்கள் சார்பில் சிறப்பு பூஜை நடந்தது. பல்வேறு கிராமங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் நடத்திய ஐயப்ப சுவாமி கன்னி பூஜையில் கோயில் நிர்வாகி முத்து வன்னியன் தலைமை வகித்தார். ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள், 18 படி பூஜை செய்து சரவண கோஷம், ஐயப்பன் பாடல்கள் பாடினர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
போடி: சீனிவாசப் பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலர் அலங்காரத்தில் பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் தரிசனம் பெற்றனர். ஏற்பாடுகளை தக்கார் மாரிமுத்து, சுவாமி அலங்காரங்களை கார்த்திக் பட்டாச்சாரியார் செய்திருந்தார்.
கீழச்சொக்கநாதர், மேலச் சொக்கநாதர் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.
சுப்பிரமணியசுவாமி கோயிலில் முருகன், வள்ளி, தெய்வாணைக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.
போடி ஐயப்பன் கோயில், புதூர் சங்கடகர விநாயகர் கோயில், அக்ரஹாரம் பால விநாயகர் கோயிலில் விநாயகருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.
போடி ஆரோக்கிய அன்னை சர்ச்சில் உலக அமைதி வேண்டி மாதாவிற்கு சிறப்பு வழிபாடுகள், கலை நிகழ்ச்சி, கூட்டு வழிபாடுகள் நடந்தன.

