/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஓணச்சந்தை திறப்பு: 10 முதல் 30 சதவீத விலை குறைவில் விற்பனை
/
ஓணச்சந்தை திறப்பு: 10 முதல் 30 சதவீத விலை குறைவில் விற்பனை
ஓணச்சந்தை திறப்பு: 10 முதல் 30 சதவீத விலை குறைவில் விற்பனை
ஓணச்சந்தை திறப்பு: 10 முதல் 30 சதவீத விலை குறைவில் விற்பனை
ADDED : ஆக 28, 2025 04:50 AM
மூணாறு: மூணாறில் சர்வீஸ் கூட்டுறவு வங்கி சார்பில் ஓணச் சந்தை திறக்கப்பட்டது.
கேரளாவில் முக்கிய பண்டிகையான ஓணம் செப்.5ல் கொண்டாடப்படுகிறது. அதனை அனைத்து தரப்பினரும் சிரமம் இன்றி கொண்டாடும் வகையில் பொது வழங்கல் துறை நிறுவனமான 'சப்ளை கோ' வின் விற்பனை மையங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் என பல்வேறு அரசு சார்பிலான நிறுவனங்கள் மூலம் ஓணச் சந்தைகள் திறக்கப்பட்டு விலை குறைவில் அத்தியாவசியப் பொருட்கள் விற்கப்படும்.
மூணாறில் சர்வீஸ் கூட்டுறவு வங்கி சார்பில் ஓணச் சந்தை நேற்று திறக்கப்பட்டது.
செப்.5 வரை செயல்படும். அதனை வங்கியின் தலைவர் சசி தொடங்கி வைத்தார். வங்கியின் உதவி செயலர் நீது அன்னாசாக்கோ உட்பட வங்கி ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.
ஓணச்சந்தையில் அரிசி, சர்க்கரை, பாசிப்பயறு, துவரம் பருப்பு, தேங்காய் எண்ணெய் உட்பட 13 வகை பொருட்கள் வெளி மார்க்கெட் விலையில் இருந்து 10 முதல் 30 சதவீதம் வரை விலை குறைவாக விற்பனை செய்யப்பட்டன.