ADDED : அக் 28, 2025 04:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ராஜதானி எஸ்.ஐ.,செல்வராஜ் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். மொட்டனூத்து விலக்கு அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்தவரை பிடித்து விசாரித்தனர்.
அவரிடம் சோதனை செய்ததில் 1.100 கிலோ கஞ்சா இருந்துள்ளது. விசாரணையில் அவர் கொப்பம்பட்டியை சேர்ந்த மணிவாசகம் 32, என்பதும், திண்டுக்கல் பைபாஸ் ரோட்டில் இருந்து அடையாளம் தெரிந்த பெயர் விலாசம் தெரியாத நபரிடம் இருந்து கஞ்சா வாங்கி வந்ததும் தெரிய வந்தது.
கஞ்சா மற்றும் மொபைல் போனை பறிமுதல் செய்த போலீசார் மணிவாசகத்தை கைது செய்தனர்.

