/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போலீசாரை தாக்கிய வழக்கில் ஒருவர் கைது
/
போலீசாரை தாக்கிய வழக்கில் ஒருவர் கைது
ADDED : ஆக 20, 2025 06:50 AM

மூணாறு : மூணாறு அருகே கஞ்சா வழக்கில் தொடர்புடையவரை கைது செய்வதற்கு சென்ற போலீசாரை தாக்கிய வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
மூணாறு அருகே சைலன்ட்வாலி எஸ்டேட்டைச் சேர்ந்தவர் சரத் 35. இவர், கஞ்சா மொத்த விற்பனையாளர் என மூணாறு டி.எஸ்.பி. அலெக்ஸ்பேபி தலைமையான ரகசிய போலீசாருக்கு தெரியவந்தது. அவர்கள் சரத்தை கைது செய்வதற்கு ஆக.16ல் மாலை வீட்டிற்கு சென்றனர். அப்பகுதியைச் சேர்ந்த சிலர், சரத்தின் உறவினர்கள் ஆகியோர் சரத்தை கைது செய்ய விடாமல் தடுத்து போலீசாரை தாக்கினார். நான்கு போலீசார் பலத்த காயம் அடைந்த நிலையில் சரத் தப்பிச் சென்றார்.
போலீசாரை தாக்கியதாக சரத்தின் தந்தை , தாயார், மனைவி உட்பட ஐந்து பேர் மீது தேவிகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தேவிகுளம் போலீசார் சரத்தின் உறவினர் சைலன்ட்வாலியைச் சேர்ந்த ஜேம்ஸ்அந்தோணிராஜை 51, நேற்று கைது செய்தனர். சரத் உட்பட சிலரை தேடி வருகின்றனர்.