/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மா சாகுபடி தொழில்நுட்ப ஒரு நாள் இலவச பயிற்சி
/
மா சாகுபடி தொழில்நுட்ப ஒரு நாள் இலவச பயிற்சி
ADDED : மார் 04, 2024 06:19 AM
தேனி: பெரியகுளம் தோட்டக்கலை கல்லுாரி தொழில்முனைவோர் மேம்பாட்டு நிலையத்தில் மா சாகுபடி குறித்து ஒரு நாள் இலவச பயிற்சி வகுப்பு நாளை (மார்ச் 5ல்) நடைபெறுகிறது.
பயிற்சி காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது. பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் 63791 40583 என்ற அலைபேசி எண்ணில் இன்று மாலை 5:00 மணிக்குள் முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. முதலில் முன்பதிவு செய்யும் 100 பேருக்கு மட்டும் அனுமதிக்கப்படுவர். பயிற்சியில் மா சாகுபடியில் புதிய தொழில்நுட்பங்கள், ஒருங்கிணைந்த பூச்சி, நோய் மேலாண்மை, ஏற்றுமதி வாய்ப்புகள் பற்றி பேராசிரியர்கள், தொழில்முனைவோர் மைய அதிகாரிகள் விளக்கம் அளிக்க உள்ளனர்.

