/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இடுக்கியில் வாகன விபத்துக்கள் ஒருவர் பலி, பத்து பேர் காயம்
/
இடுக்கியில் வாகன விபத்துக்கள் ஒருவர் பலி, பத்து பேர் காயம்
இடுக்கியில் வாகன விபத்துக்கள் ஒருவர் பலி, பத்து பேர் காயம்
இடுக்கியில் வாகன விபத்துக்கள் ஒருவர் பலி, பத்து பேர் காயம்
ADDED : மே 06, 2025 06:48 AM

மூணாறு: இடுக்கி மாவட்டத்தில் இரு வெவ்வேறு வாகன விபத்துகளில் ஒருவர் பலியான நிலையில், பத்து பேர் பலத்த காயம் அடைந்தனர்.
ராஜாக்காடு அருகே மாவரசிட்டியை சேர்ந்த நண்பர்கள் நிகில் 18, நந்து கிருஷ்ணன் 18. இருவரும் நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு ராஜாக்காடு, பொன்முடி ரோட்டில் டூவீலரில் சென்றனர். நிகில் டூவீலரை ஓட்டினார்.
செரிபுரம் பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த டூவீலர், வீட்டின் சுவரில் மோதி விபத்து நடந்தது. அதில் இருவரும் பலத்த காயம் அடைந்த நிலையில் சம்பவ இடத்தில் நிகில் இறந்தார்.
ராஜகிரியில் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நந்து கிருஷ்ணன் சிகிச்சை பெற்று வருகிறார். பிளஸ் 2 மாணவரான நிகில், தேர்வு எழுதி முடிவுக்கு காத்திருந்த நிலையில் விபத்தில் சிக்கி இறந்தார் என்பது குறிப்பிடதக்கது.
10 பேர் காயம்: கேரளா, மலப்புரம் தானுாரைச் சேர்ந்த முகம்மது பர்தீன் 17, தில்ஷாத் 18, ரினாஸ்பாபு 18, நிகாத் 16, நாஷில் அஜினாஸ் 19, அன்ஷாத் 18, லாஷிம் 17, சஹபாஸ் 18, பரான் 18, ஆகியோர் காரில் மூணாறுக்கு சுற்றுலா வந்தனர்.
அவர்கள் சுற்றுலாவை முடித்து வீட்டு நேற்று ஊருக்கு திரும்பினர்.
அப்போது மூணாறு உடுமலைபேட்டை ரோட்டில் வாகுவாரை எஸ்டேட் பகுதியில் கார் கட்டுப்பாட்டை இழந்து தேயிலை தோட்டத்தினுள் 500 அடி துாரம் திடீரென உருண்டது.
அதில் கார் உருக்குலைந்த நிலையில் அனைவரும் பலத்த காயம் அடைந்தனர்.
அப்பகுதியில் உள்ள தோட்ட நிர்வாகத்திற்கு சொந்தமான மருத்துவமனையில் அனைவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் அடிமாலி தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மறையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.