/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போடி அரு கே டூவீலர் மீது கார் மோதி ஒருவர் பலி
/
போடி அரு கே டூவீலர் மீது கார் மோதி ஒருவர் பலி
ADDED : ஜன 03, 2025 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி; போடி அருகே சில்லமரத்துப்பட்டி காந்திஜி தெருவை சேர்ந்தவர் செல்வநாதன் 72. விவசாயி. இவர் நேற்று தர்மத்துப்பட்டி மெயின் ரோட்டின் ஓரமாக டூவீலரில் சென்றார்.
பின்பக்கமாக வந்த தேனி,வாலையாத்துப்பட்டியை சேர்ந்த சிங்கப்பாண்டியன் என்பவர் கார் டூவீலர் மீது மோதி செல்வதன்நாதன் பலத்த காயம் அடைந்தார். அவரை போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
பரிசோதித்த டாக்டர் செல்வநாதன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். செல்வநாதன் மகன் சுதாகர் புகாரில் சிங்கப்பாண்டியன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.