UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 06:56 PM
அ நிறம் | அளவு
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே மணியக்காரன்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் 66, ஆண்டிபட்டி - ஏத்தகோயில் ரோட்டில் உள்ள தனியார் பால்பண்ணையில் பால் கேன்களை சுத்தம் செய்யும் வேலை செய்து வந்தார்.
நேற்று காலை பால் கேன்களை சுத்தம் செய்து கொண்டிருந்த போது அங்கிருந்த மின் ஒயர் மூலம் மின்சாரம் தாக்கியது. மயக்கம் அடைந்த ராஜேந்திரனை ஆண்டிபட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். ராஜேந்திரன் மனைவி அன்னாள்மேரி புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
