ADDED : அக் 21, 2025 04:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: கண்டமனுார் அருகே உள்ள ஜி.உசிலம்பட்டி விஷ்ணு பிரசாத் 29. இவர் வடபுதுப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார்.
அங்கிருந்து அன்னஞ்சி விலக்கில் இருந்து புது பஸ் ஸ்டாண்ட் செல்லும் பைபாஸ் ரோடு வழியாக ஜி.உசிலம்பட்டி திரும்பினார். அந்த ரோட்டில் வனப்பகுதி அருகே செல்லும் போது எதிரே அல்லிநகரம் ராம்குமார் ஓட்டி வந்த டூவீலர் மீது மோதி விபத்து நடந்தது. இந்த விபத்தில் விஷ்ணுபிரசாத் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். ராம்குமார் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.