டூவீலர்கள் விபத்தில் இருவர் காயம்
தேனி: கைலாசப்பட்டி முத்துக்குமார், ரகுபதி. இருவரும் டூவீலரில் தேனியில் இருந்து வீடு திரும்பினர். ரத்தினம் நகர் அருகே சென்ற போது தேனி நோக்கி டூவீலரில் வந்த கடமலைக்குண்டு கரட்டுப்பட்டி முருகேஸ்வரன், கவனக்குறைவாகவும், வேகமாகவும் திடீரென ரோட்டை கடந்தார். இவர் ஓட்டி வந்த டூவீலர் முத்துக்குமார் ஓட்டி வந்த டூவீலரில் மோதி விபத்து நடந்தது. இந்த விபத்தில் முத்துக்குமார், ரகுபதி இருவரும் காயமடைந்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
டூவீலர் விபத்து வாலிபர்கள் காயம்
தேனி: பெரியகுளம் வடகரை பள்ளிவாசல் தெரு புவனேஸ்வரன் 25. இவர் தீபாவளி பண்டிகைக்காக துணி எடுக்க தேனி வந்தார். டூவீலரில் பெட்ரோல் தீர்ந்ததால் மதுராபுரி விலக்கு அருகே டூவீலரை நிறுத்தி விட்டு அன்னஞ்சி விலக்கில் பஸ் ஏறி, நடந்து சென்றார். சவுடேஸ்வரி நகர் அருகே நடந்து சென்ற போது, அவருக்கு பின்னால் தேவாரம் லட்சுமிநாயக்கன்பட்டி எல்லன்னா கோபி ஓட்டி வந்த டூவீலர் மோதி விபத்து நடந்தது. விபத்தில் இருவரும் காயமடைந்தனர். இருவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
விடுதியில் தொழிலாளி மரணம்
தேனி: பழனிசெட்டிபட்டி தொழிலாளி பாலமுருகன் 50. குடும்பத்தை பிரிந்து விடுதியில் தங்கி இருந்தார். உடல் நிலை பாதிக்கப்பட்டு, குடிக்கு அடிமையாகி இருந்தார். விடுதியில் உறவினர் விஜயகுமார் உடன் தங்கி இருந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை பாலமுருகன் மயக்க நிலையில் இருந்தார். விஜயகுமார் 108 ஆம்புலன்ஸூக்கு தகவல் தெரிவித்தார். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசோதித்து, இறந்து விட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து பாலமுருகனின் தங்கை செல்வபாண்டிக்கு, விஜயகுமார் தகவல் தெரிவித்தார். அவர் இறந்த பாலமுருகன் உடலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தார். பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
கொலை மிரட்டல்: வாலிபர் கைது
தேனி: பழனிசெட்டிபட்டி சுரேஷ். அதே பகுதியில் கோழிப்பண்ணை வைத்துள்ளார். இவரது பண்ணையில் போடேந்திரபுரம் பவுன்தாய் 50, செல்வி உள்ளிட்டோர் பணிபுரிகின்றனர். இவர்கள் வீடுகளுக்கு தீபாவளி பண்டிகைக்காக இனிப்புகள் வழங்க போடேந்திரபுரத்திற்கு சுரேஷ் சென்றார். அவரை பார்த்த அதே பகுதியை சேர்ந்த ஜெகன் 30, சுரேஷை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இதை தட்டிக்கேட்ட பவுன்தாய், செல்வி ஆகியோரையும் தாக்கினார். இதில் செல்வி காயமடைந்தார். ஜெகனை வீரபாண்டி போலீசார் கைது செய்தனர்.
காவலாளி மாரடைப்பால் பலி
தேவதானப்பட்டி : உத்தமபாளையம் அருகே சங்கராபுரம் நடுத்தெரு மணி 54. ஜெயமங்கலம் கே.எம்.சி., கிரசரில் வாட்ச்மேன் வேலை செய்து வந்தார். அங்குள்ள பாத்ரூம் சென்றவர் மாரடைப்பால் கீழே விழுந்து இறந்தார். ஜெயமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.