ADDED : ஜூன் 12, 2025 02:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவாரம்: தேவாரம் குலாலர் மண்டபம் அருகே வசிப்பவர் முருகன் 47. மாட்டு கொட்டகை வைத்துள்ளார். இவர் அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்ய முயன்று உள்ளார்.
அவரிடம் இருந்து தப்பி வந்த சிறுமி பெற்றோரிடம் கூறி உள்ளார். சிறுமியின் பெற்றோர் புகாரில் தேவாரம் போலீசார் முருகனை போக்சோவில் கைது செய்தனர்.