ADDED : நவ 22, 2024 05:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் பட்டாளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கருத்தையன் 72. காணாமல் போன மாட்டினை வடுகபட்டி
ரோட்டில் தேடி சென்றார். அப்போது பெரியகுளத்தில் இருந்து ஆண்டிபட்டிக்கு சென்ற அரசு டவுன்பஸ் கருத்தையன் மீது மோதியது. சம்பவ இடத்திலே பலியானார். விபத்து ஏற்படுத்திய மேல்மங்கலத்தைச் சேர்ந்த டிரைவர் குமரனை 55. தென்கரை போலீசார் கைது செய்தனர்.