ADDED : மார் 21, 2025 06:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி, : கொடைக்கானல் அருகே தாண்டிக்குடி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்தவர் வீரமுத்து 31.
இவரது அண்ணன் வீரபத்திரன் 33. சில மாதங்களுக்கு முன் இவரது மனைவி இறந்தார். இதனால் மது பழக்கத்திற்கு வீரபத்திரன் அடிமையானார். வேலைக்கு செல்வதாக வீட்டில் இருந்து சென்றவர், நேற்று முன்தினம் இரவு தேவதானப்பட்டி வத்தலக்குண்டு ரோட்டில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.-