/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விநாயகர் ஊர்வலத்தில் ஒருவருக்கு கத்திக்குத்து
/
விநாயகர் ஊர்வலத்தில் ஒருவருக்கு கத்திக்குத்து
ADDED : ஆக 29, 2025 03:45 AM
கம்பம்: கம்பத்தில் நேற்று காலை ஹிந்து முன்னணி மற்றும் எழுச்சி முன்னணி சார்பில் விநாயகர் ஊர்வலம் நடந்தது. ஹிந்து முன்னணி ஊர்வலம் சுருளிப்பட்டி ரோட்டில் சென்ற போது கோம்பை ரோடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் மகன் ரித்விக் 23, என்பவருக்கும், மணிகட்டி ஆலமரம் பகுதியை சேர்ந்தவருக்கும் டிராக்டரை ஒட்டிச் செல்வதில் தகராறு ஏற்பட்டது.
முல்லைப் பெரியாற்றில் சிலைகளை கரைத்து விட்டு திரும்பிய போது, ரித்விக் தனது நண்பர்களுடன் சென்றார். அப்போது இரு தரப்பினருக்கும் இருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ரித்விக்கிற்கு கத்திக் குத்து விழுந்தது. தகவலின்பேரில் போலீசார் ரித்விக்யை கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். கம்பம் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்