/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாணவர்களுக்கு ஒருவார அறிமுக பயிற்சி முகாம்
/
மாணவர்களுக்கு ஒருவார அறிமுக பயிற்சி முகாம்
ADDED : ஜூலை 02, 2025 07:18 AM
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அரசு கலை,அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஒரு வார கால அறிமுக பயிற்சி முகாம் கல்லூரியில் துவங்கியது.
உயர் கல்வித்துறை வழிகாட்டுதலின்படி துவக்கப்பட்ட முகாமில் கல்லூரி முதல்வர் மணிகண்டன் தலைமை வகித்தார்.
முதல் நாள் நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் மீனாட்சி சுந்தரம், கவிஞர் ஞானபாரதி, 2ம் நாளில் சட்டப் பணிகள் ஆணை குழு சார்பில் வழக்கறிஞர் ராமச்சந்திரன், சித்த மருத்துவர் முத்துநாகு ஆகியோர் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினர். ஒரு வார பயிற்சி முகாமில் பாடத்திட்டம், மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, அரசின் திட்டங்கள், பொது சுகாதாரம், சட்ட விழிப்புணர்வு, அடிப்படை உரிமைகள், கல்லூரியில் செயல்படும் குழுக்கள், அமைப்புகள், அவற்றின் செயல்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு விளக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.