/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கந்து வட்டி வழக்கில் மூவருக்கு ஓராண்டு சிறை , அபராதம்
/
கந்து வட்டி வழக்கில் மூவருக்கு ஓராண்டு சிறை , அபராதம்
கந்து வட்டி வழக்கில் மூவருக்கு ஓராண்டு சிறை , அபராதம்
கந்து வட்டி வழக்கில் மூவருக்கு ஓராண்டு சிறை , அபராதம்
ADDED : பிப் 20, 2025 06:06 AM

தேனி: போடி மேலசொக்கநாதபுரம் பெண்ணிடம் கந்துவட்டி வசூல் செய்து,ஜாதியை கூறி இழிவாக பேசி கொலை மிரட்டல் விடுத்த போடி சுப்புராஜ்நகர் பேச்சிமுத்து 65, மனைவி பூங்கொடி 62,மகன் துனேஷ்குமார் 41 ஆகிய மூவருக்கு தலா ஓராண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து, மாவட்ட சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலசொக்கநாதபுரம் பட்டாளம்மன் கோயில் தெரு பெருமாள் மனைவி மணி 49. இவரது மாமனார்திருமன் பெயரில் 1 சென்ட் இடம் இங்குள்ள காலனியில் உள்ளது. பேச்சிமுத்து, மனைவி பூங்கொடி, மகன் துனேஷ்குமார் கந்து வட்டி தொழில் செய்தனர். மணி மாமனார் வீட்டை ஈடாக சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துரூ.25 ஆயிரம் கந்து வட்டிக்கு கடன் வழங்கினர். அதன்பின் மணி ரூ.1.10 லட்சம் கந்து வட்டியாகவும், அசல் பணம் ரூ.20 ஆயிரத்தை திருப்பி பூங்கொடி வழங்கினார்.
பின் பதிவு செய்த ஆவணத்தை ரத்து செய்யாமல் இழுத்தடித்தனர். 2018 செப்.23 மணியின் வீட்டிற்கு வட்டிவசூலிக்க வந்த மூவரும்,அவரை ஜாதியை கூறி இழிவாக பேசி, வீட்டை எழுதிதர கோரி கொலை மிரட்டல் விடுத்தனர். தகராறில் கணவர் பெருமாளையும் தாக்கினர். மணி புகாரில் போடி தாலுகா போலீசார் மூவர் மீதும்எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டம், கந்துவட்டி தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர். இந்த வழக்கு எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு வழக்கறிஞர்இசக்கிமுத்து ஆஜரானார். குற்றவாளிகள் பேச்சிமுத்து, அவரது மகன்துனேஷ்குமாருக்கு தலா ஓராண்டுகள் சிறை, ரூ.6 ஆயிரம் அபராதம், பூங்கொடிக்கு ஓராண்டுசிறை, ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து, நீதிபதி அனுராதா தீர்ப்பளித்தார்.

