/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆடு, மாடு வளர்ப்பு பயிற்சி பெற்றவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு
/
ஆடு, மாடு வளர்ப்பு பயிற்சி பெற்றவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு
ஆடு, மாடு வளர்ப்பு பயிற்சி பெற்றவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு
ஆடு, மாடு வளர்ப்பு பயிற்சி பெற்றவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு
ADDED : டிச 06, 2025 05:22 AM
தேனி: தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், ஊரக பகுதி மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான திறன் வளர்ப்பு பயிற்சியாக ஆடு, மாடு, நாட்டுக் கோழி, இறைச்சிக் கோழி, பன்றி வளர்ப்பிற்கான பயிற்சி 20 நாட்கள் நடந்தது. பயிற்சியில் 23 பேர் பயிற்சி நிறைவு செய்தனர்.
இவர்களுக்கு கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் அலைபேசி செயலியில் ஆன்லைன் தேர்வு நேற்று நடந்தது.
கால்நடை பராமரிப்புத்துறைஇணை இயக்குனர் டாக்டர்இளங்கோவன் தலைமை வகித்தார். உழவர் பயிற்சி மைய போராசிரியர் டாக்டர் விமல்ராஜ்குமார், தேனி கால்நடை டாக்டர் கங்காசூடன் ஆன்லைன் அலைபேசி தேர்வு குறித்து விளக்கினர்.
தேர்வுகள் காலை 10:00 முதல் நேற்று மாலை 4:00 மணிவரை மூன்று அமர்வுகளாக நடந்தது.
இதில்தேர்ச்சி பெறும் தேர்வர்களுக்கு ரூ.6000 உதவித்தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும். சான்றிதழும் வழங்கப்படும் என இணை இயக்குனர் தெரிவித்தார்.