/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தடுப்பூசி செலுத்திய மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி
/
தடுப்பூசி செலுத்திய மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி
தடுப்பூசி செலுத்திய மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி
தடுப்பூசி செலுத்திய மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி
ADDED : டிச 06, 2025 05:22 AM
தேனி: தேனி பெரியகுளம் ரோட்டில் உள்ள தனியார் பள்ளி மாணவி களுக்கு நேற்று மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் தொண்டை அடைப்பான் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
24 மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் மூன்று மாணவிகள் வாந்தி எடுத்து மயங்கினர். சிகிச்சைக்குப்பின் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். இந்நிலையில் அவர்களுக்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது. இதையடுத்து தொடர் கண்காணிப்பிற்காக மூன்று மாணவிகளும் தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டன. டாக்டர்கள் கூறுகையில், நோய் எதிர்ப்பு சக்தியை தாங்கிக் கொள்வதற்கு சிறுமிகள் உடலில் எதிர்வினை ஆற்றும் போது வாந்தி மயக்கம் வரலாம். தொடர் கண்காணிப்பு மூலம் இயல்பு நிலைக்கு திரும்பிவிடுவர். இதனால் பெற்றோர், ஆசிரியர்கள் அச்சப்பட வேண்டியதில்லை, என்றனர்.