/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வடகிழக்கு பருவமழை துவக்கம் தீயணைப்பு வீரர்களுக்கு விடுப்பு இல்லை
/
வடகிழக்கு பருவமழை துவக்கம் தீயணைப்பு வீரர்களுக்கு விடுப்பு இல்லை
வடகிழக்கு பருவமழை துவக்கம் தீயணைப்பு வீரர்களுக்கு விடுப்பு இல்லை
வடகிழக்கு பருவமழை துவக்கம் தீயணைப்பு வீரர்களுக்கு விடுப்பு இல்லை
ADDED : அக் 15, 2024 05:39 AM
பெரியகுளம்: வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதால் இரு மாதங்களுக்கு தீயணைப்பு வீரர்கள், அலுவலர்கள் விடுப்பு எடுக்க கூடாது என மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் விவேகானந்தன் உத்தரவிட்டுள்ளார்.
மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், போடி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், ஆண்டிபட்டி, கடமலைக்குண்டு, மயிலாடும்பிறை ஆகிய 9 இடங்களில் தீயணைப்பு நிலைய அலுவலகம் உள்ளது.
இதில் மாவட்ட தீயணைப்பு அலுவலர், நிலைய அலுவலர்கள் உட்பட 170 வீரர்கள் உள்ளனர். மழை காலங்களில் நீர் நிலைகளில் வெள்ளம், மழையால் சிக்குபவர்களை காப்பாற்றவும், இயற்கை இடர்பாடுகள் உட்பட பல்வேறு பாதுகாப்பு மீட்பு பணிகளில் தீயணைப்பு வீரர்களின் பணி அளப்பறியாதது.
வடகிழக்கு பருவமழை,தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிப்பதினால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்.
மாவட்ட தீயணைப்பு அலுவலர் விவேகானந்தன் அனைத்து தீயணைப்பு நிலைய அலுவகத்திற்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் அக். 15 முதல் டிச.15 வரை 2 மாதங்கள் யாரும் விடுப்பு எடுக்க கூடாது என தெரிவித்துள்ளார்.