/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கல்லுாரியில் குடிநீர் தொட்டி திறப்பு விழா
/
கல்லுாரியில் குடிநீர் தொட்டி திறப்பு விழா
ADDED : ஜன 24, 2025 05:22 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 15 வது நிதி குழு மாவட்ட கவுன்சில் நிதியிலிருந்து ரூ.5 லட்சம் செலவில் புதிய போர்வெல் மற்றும் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான திறப்பு விழாவிற்கு கல்லூரி முதல்வர் சுஜாதா தலைமை வகித்தார். தேனி எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன் புதிய குடிநீர் தொட்டியை திறந்து வைத்தார். தமிழ் துறை தலைவர் விஜயா வரவேற்றார். முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வளர்மதி, ஆண்டிபட்டி பி.டி.ஓ., ஜெகதீச சுந்தரபோஸ், ஆண்டிபட்டி பேரூராட்சி தலைவர் சந்திரகலா, முன்னாள் தலைவர் ராமசாமி, உயர் நீதிமன்ற வழக்கறிஞர் நிஷாந்த், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வைரமுத்து, தேசிய நல்லாசிரியர் தில்லை நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

