ADDED : ஜூலை 12, 2025 04:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.70 கோடி மதிப்பில் தரைத்தளத்தில் 3 ஸ்மார்ட் வகுப்பறைகள், முதல் தளத்தில் 3 வகுப்பறைகள், 2ம் தளத்தில் 2 வகுப்பறைகளும் என மொத்தம் 8 கூடுதல் வகுப்பறைகள், குடிநீர், மின் வசதியுடன் கட்டப்பட்டது.
இந்த வகுப்பறைகளை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இப் பள்ளியில் நடந்த விழாவில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் குத்துவிளக்கு ஏற்றி வைதது பார்வையிட்டார். பொதுப்பணித்துறை செயற்பெறியாளர் பிரபு, உதவி செயற்பொறியாளர்செந்தில்குமார், பள்ளி தலைமை ஆசிரியை பாக்கியலட்சுமி, ஆசிரியர்கள் பங்கேற்றனர்.