ADDED : பிப் 20, 2024 06:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.4.51 கோடி மதிப்பீட்டில் 18 வகுப்பறைகள், 3 ஆய்வகங்கள், விளையாட்டு மைதானம் கட்டப்பட்டது. திறப்பு விழா தேனி மாவட்டக்கல்வி அலுவலர் (இடைநிலை) வசந்தா தலைமையில் நடந்தது.
தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
சருத்துப்பட்டி ஊராட்சி துணைத் தலைவர் ஆண்டவர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் இளையராஜா, ஊராட்சி முன்னாள் தலைவர் கழுவன், பெற்றோர் ஆசிரியர் கழக முன்னாள் தலைவர் முருகன், சமூக ஆர்வலர்கள் கலா, வாசுகி, நரசிம்ம பாரதி, ஆசிரியர்கள், ஆசிரியைகள், மாணவர்கள், மாணவிகள் பங்கேற்றனர். ஆசிரியர் வெள்ளிச் சுப்பையன் நன்றி கூறினார்.

