ADDED : பிப் 16, 2024 06:17 AM
பெரியகுளம்: தினமலர் செய்தி எதிரொலியாக வடுகபட்டியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
பெரியகுளம் அருகே வடுகபட்டி மலைமேல் முனியாண்டி கோயில் வளாகத்தில் நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. தை மாதம் அறுவடை துவங்கும் என்பதால் பிப்.1 ல் நெல் கொள்முதல் நிலையம் திறப்பது வழக்கம். தாமரைக்குளம் கண்மாய் புரவில் பல நூறு ஏக்கர் நெல் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தும் நெல் கொள்முதல் நிலையம் திறக்கவில்லை. இதனால் சில ஏக்கரில் அறுவடை செய்து நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொட்டப்பட்டு ஒரு வாரம் ஆகிய நிலையில் விவசாயிகள் இரவு காவல் காத்து வந்தனர். இதனால் விவசாயிகள் நெல் அறுவடை தொடராமல் இருந்தனர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று முதல் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து நெல் அறுவடை துவங்கியது.--