/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வி.பி.எஸ்., பம்ஸ் கார்ப்பரேஷன் திறப்பு
/
வி.பி.எஸ்., பம்ஸ் கார்ப்பரேஷன் திறப்பு
ADDED : நவ 10, 2024 06:14 AM

தேனி : தேனி திட்டசாலையில் வி.பி.எஸ்., பம்ஸ் கார்ப்பரேஷன் புதிய ஷோரும் திறப்பு விழா நடந்தது.
தேனி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார். ஷோரூமை பி.பி., கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் பாண்டியராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தேனி கவுமாரியம்மன் புட்ஸ் பிரைவேட் லிமிடெட் குழும தலைவர் லட்சுமணன், ராமஜெயம் ஏஜென்ஸி நிறுவனர் அஜய் கார்த்திக் ராஜா, அகிலா ஜூவல்லரி பிரேம்சாய், கே.எம்.சி. குழும தலைவர் முரளிதரன் குத்துவிளக்கேற்றினர். விழாவில் என்.பி.ஆர். ஜூவல்லரி சத்யநாராயணன், பியூச்சர்வே கம்யூட்டர் பால்பாண்டி, தேனி வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் உறுப்பினர்கள் பங்கேற்றனர். வி.பி.எஸ். பம்ஸ் கார்ப்பரேஷன் உரிமையாளர் தர்மராஜ் கூறுகையில், 'விவசாயத்திற்கு தேவையான தரமான பம்புகள், மோட்டார்கள் அனைத்தும் சரியான விலையில் விற்பனை செய்கிறோம்' என்றார்.