ADDED : ஜூன் 04, 2025 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: ஆப்பரேஷன் சிந்தூர் வெற்றியை தந்த முப்படைவீரர்கள், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து ஊர்வலம் வடுகபட்டி பேரூராட்சி அலுவலகம் வளாகத்தில் துவங்கியது. பா.ஜ., கிழக்கு ஒன்றிய பொதுச்செயலாளர் ராமகுரு தலைமை வகித்தார்.
ஒன்றிய தலைவர் முத்தையா, துணைத்தலைவர் தேவகாந்தன் முன்னிலை வகித்தனர்.ராணுவ கேப்டன் ராஜேந்திரன் ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
ஐ.டி., பிரிவு மாநில செயலாளர் வசந்த் பாலாஜி, மாவட்ட செயலாளர் விஜயராணி, துணைத்தலைவர் மகாலிங்கம், பொதுசெயலாளர் பாண்டி உட்பட ஏராளமானோர் தேசியக்கொடி ஏந்தி, முக்கிய தெருக்கள் வழியாக சென்றனர்.