நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி; தேனியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர், ஓய்வூதியம் அகவிலைபடியுடன் ரூ.6750 வழங்க வேண்டும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி கருப்பு முக்காடு அணிந்து ஒப்பாரி போராட்டம் நடத்தினர்.
தேனி ஒன்றிய தலைவர் ஆவர்ண பேச்சி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஈஸ்வரன், நிர்வாகிகள் அன்பழகன், தேவேந்திரன், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.