/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
'பேஸ் புக்' மூலம் கலெக்டரிடம் புகார் அளிக்க வாய்ப்பு
/
'பேஸ் புக்' மூலம் கலெக்டரிடம் புகார் அளிக்க வாய்ப்பு
'பேஸ் புக்' மூலம் கலெக்டரிடம் புகார் அளிக்க வாய்ப்பு
'பேஸ் புக்' மூலம் கலெக்டரிடம் புகார் அளிக்க வாய்ப்பு
ADDED : ஏப் 10, 2025 06:30 AM
மூணாறு: இடுக்கி மாவட்டத்தில் பொதுமக்கள் 'பேஸ் புக்' மூலம் கலெக்டர் விக்னேஸ்வரியிடம் புகார் அளிக்க நேற்று (ஏப்.9) முதல் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இம்மாவட்டம் மலையோர பகுதி என்பதால் தொலை தூரங்களில் வசிக்கும் மக்கள் தங்களின் பிரச்னைகளை கலெக்டர் உள்பட அதிகாரிகளிடம் புகார் அளிக்க இயலாத நிலை உள்ளது. பிரச்னைகளில் சிக்கி தவிக்கும் பெரும்பாலான மக்கள் அதற்கு தீர்வு காண இயலாமலும், யாரிடம் புகார் அளிப்பது என தெரியாமல் உள்ளனர்.
அதற்கு தீர்வு காணும் வகையில் கலெக்டர் விக்னேஸ்வரியிடம் ' பேஸ் புக்' வாயிலாக புகார் அளிக்கும் வசதி இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கலெக்டரின் அதிகாரபூர்வமான பேஸ் புக் பக்கத்தில் ஒவ்வொரு புதன் கிழமை தோறும் மாலை 6:00 முதல் 7:00 மணி வரை புகார் தெரிவிக்கலாம்.
இது குறித்து கலெக்டர் கூறுகையில், 'மாவட்டத்தின் அடிப்படை வளர்ச்சி, பிரச்னைகள் குறித்து மக்களிடம் நேரடியாக கேட்கப்படும்.
பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்படும். அல்லது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். தேவையற்ற கேள்விகள், நீதிமன்றம் தொடர்பான பிரச்னைகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்,' என்றார்.

