/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காதலர் தினத்திற்கு எதிர்ப்பு ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
/
காதலர் தினத்திற்கு எதிர்ப்பு ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
காதலர் தினத்திற்கு எதிர்ப்பு ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
காதலர் தினத்திற்கு எதிர்ப்பு ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 15, 2025 06:44 AM
ஆண்டிபட்டி : காதலர் தினம் என்ற பெயரில் ஹிந்து கலாச்சாரத்தை சீரழிக்கும் நடவடிக்கையை கண்டித்தும் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஹிந்து முன்னணி சார்பில் வைகை அணையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் கார்த்திக் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர்கள் சுந்தர், மொக்கராஜ், மாவட்ட பொதுச் செயலாளர் பாலமுருகன், ஆண்டிபட்டி நகர செயலாளர் ராஜ்குமார், ஒன்றிய பொதுச் செயலாளர்கள் செந்தில்குமார், லோகேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். வைகை அணை பூங்காவின் பல்வேறு இடங்களில் காதல் ஜோடிகளை திருமணம் செய்து வைக்க மாலை, தாலிக்கயிறுடன் தேடினர். யாரும் இல்லாததால் திரும்பி சென்றனர். முன்னதாக புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.