/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நிலங்களுக்கு செல்லும் பாதை மூடும் முயற்சிக்கு எதிர்ப்பு
/
நிலங்களுக்கு செல்லும் பாதை மூடும் முயற்சிக்கு எதிர்ப்பு
நிலங்களுக்கு செல்லும் பாதை மூடும் முயற்சிக்கு எதிர்ப்பு
நிலங்களுக்கு செல்லும் பாதை மூடும் முயற்சிக்கு எதிர்ப்பு
ADDED : அக் 26, 2025 05:00 AM
தேவதானப்பட்டி: கெங்குவார்பட்டி மத்துவார்குளத்திற்கு விவசாயிகள் செல்லும் பாதையை அடைக்க முயன்ற பேரூராட்சி பணியாளர்களிடம், விவசாயிகள் எதிர்ப்பால் கைவிடப்பட்டது.
தேவதானப்பட்டி அருகே காட்ரோடு கெங்குவார்பட்டி ரோட்டில் மத்துவார்குளம் உள்ளது. இந்த குளத்திற்கு மஞ்சளாறு அணை வாய்க்கால் வழியாக செல்லும் தண்ணீர், நீர் பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் குளத்திற்கு தண்ணீர் வருகிறது.
நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கும். கண்மாய் கரை வழியாக தினமும் ஏராளமான விவசாயிகள் ஈடுபொருட்கள் கொண்டு செல்கின்றனர்.
இந்நிலையில் இந்த பாதை ஓரங்களை சிலர் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதாக கெங்குவார்பட்டி பேரூராட்சி பணியாளர்கள் கல் வைத்து தடுப்பு அமைக்க முயன்றனர்.
இதற்கு மத்துவார்குளம் ஆயக்கட்டு விவசாயிகள் உரம், விளை பொருட்களை கொண்டு செல்லும் பாதையை அடைக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
மஞ்சளாறு வடிநில கோட்ட உதவி பொறியாளர் கமலக்கண்ணன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தார்.
பேரூராட்சி பணியாளர்களிடம் பேசி திருப்பி அனுப்பினர். பாதை அடைப்பது கைவிடப்பட்டது.

