/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., பிறந்த நாள் கொண்டாட்டம்
/
முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., பிறந்த நாள் கொண்டாட்டம்
முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., பிறந்த நாள் கொண்டாட்டம்
முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., பிறந்த நாள் கொண்டாட்டம்
ADDED : ஜன 14, 2024 11:47 PM

பெரியகுளம் : பெரியகுளத்தில் பிறந்த நாள் கொண்டாடிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த, ஏராளமான தொண்டர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
பெரியகுளம் தென்கரை தெற்கு அக்ரஹாரத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீடு உள்ளது. இங்கு 73 வது பிறந்த நாளை அவர் கொண்டாடினார். தேனி மாவட்டச் செயலாளர் சையதுகான் தலைமை வகித்து, ஓ.பன்னீர்செல்வத்திற்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். இவர் தலைமையில் தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, போடி, கம்பம், கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஒன்றியம் உள்ளிட்ட அனைத்து ஊர்களிலும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோயில் உட்பட, பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
கவுமாரியம்மன் கோயிலில் நடந்த சிறப்பு பூஜையில் பன்னீர்செல்வம், தனது மகன் ஜெயபிரதீப் உட்பட குடும்பத்தினருடன் பங்கேற்றார். ஓ.பி.எஸ்., அணி வடசென்னை மாவட்டச் செயலாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி 6 அடி உயர வெள்ளி வேல் வழங்கினார். -- எம்.எல்.ஏ.,க்கள் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், அய்யப்பன், தர்மர் எம்.பி., அமைப்பு செயலாளர் மஞ்சுளா, மாவட்ட துணைச் செயலாளர் முருகேசன், நகரச் செயலாளர் அப்துல்சமது, ஒன்றிய செயலாளர் செல்லமுத்து, தேனி லோக்சபா தொகுதி பா.ஜ., அமைப்பாளர் ராஜபாண்டி, பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார், நிர்வாகிகள் முருகன், அன்பு, ரங்கராஜ், காமராஜ், ஜெயப்பிரகாஷ், ராஜகோபால், பாலசுந்தரம் உட்பட ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று மாலை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர்.