/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வானிலை, மழைமானிகள் பொருத்தும் பணி ஏப்.,க்குள் முடிக்க உத்தரவு
/
வானிலை, மழைமானிகள் பொருத்தும் பணி ஏப்.,க்குள் முடிக்க உத்தரவு
வானிலை, மழைமானிகள் பொருத்தும் பணி ஏப்.,க்குள் முடிக்க உத்தரவு
வானிலை, மழைமானிகள் பொருத்தும் பணி ஏப்.,க்குள் முடிக்க உத்தரவு
ADDED : பிப் 16, 2024 06:18 AM
தேனி: மாநிலத்தில் தானியங்கி வானிலைமானி 103, மழைமானி 1299 பொருத்தும் பணிகளை ஏப்.,க்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அரசு உத்தரவிட்டுள்ளது.
தற்போது மாவட்டங்களில் பொருத்தப்பட்டுள்ள மழை மானிகளுக்கு இடைப்பட்ட துாரம் அதிகம் உள்ளதால், பல இடங்களில் மழை பொழிவு அளவை துல்லியமாக கணக்கீடுவதில் சிக்கல் நிலவுகிறது. இதற்காக தமிழகத்தில் சென்னை தவிர 37 மாவட்டங்களில் 1299 தானியங்கி மழை மானிகள் பொருத்தவும், சென்னை, கரூர், நீலகிரி, திருப்பத்துார், விருதுநகர், திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்கள் தவிர மீதமுள்ள 32 மாவட்டங்களில் 103 தானியங்கி வானிலை மானி பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மழைமானிகள் பொருத்த தாலுகா வாரியாக இடத்தேர்வு நடந்தது. இவை சில இடங்களில் திறந்த வெளியில் தரையிலும், சில இடங்களில் அரசு அலுவலகம், பள்ளி கட்டடங்களில் பொருத்தப்பட உள்ளன. அதிகபட்சமாக சேலத்தில் 9 வானிலை மானிகள், திருவண்ணாமலையில் 59, திண்டுக்கலில் 54 மழைமானிகள் பொருத்தப்பட உள்ளன. தேனியில் 26 மழை மானி, 2 வானிலை மானி அமைக்கப்படுகிறது. தானியங்கி கருவிகள் பொருத்தும் பணிகளை ஏப்., க்குள் முடித்து அம்மாத இறுதியில் கருவிகள் பயன்பாட்டிற்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது. இக்கருவிகள் பொருத்தப்பட்டால் மழை அளவு, காற்றின் ஈரப்பதம், சூரிய கதிர் வீச்சு அளவு உள்ளிட்டவை துல்லியமாக அறிய இயலும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.