/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பட்டாசு கடை உரிமத்தை மக்கள் காணும்படி வைக்க உத்தரவு
/
பட்டாசு கடை உரிமத்தை மக்கள் காணும்படி வைக்க உத்தரவு
பட்டாசு கடை உரிமத்தை மக்கள் காணும்படி வைக்க உத்தரவு
பட்டாசு கடை உரிமத்தை மக்கள் காணும்படி வைக்க உத்தரவு
ADDED : அக் 12, 2024 12:06 AM
தேனி : தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் அனைத்து மாவட்டங்களிலும் நிரந்தர பட்டாசு கடைகள் வைத்திருப்போர் உரிமத்தை புதுப்பித்து வருகின்றனர்.
இந்த கடைகளுக்கான உரிமங்களுக்கு அந்தந்த மாவட்ட டி.ஆர்.ஓ.,க்கள் அனுமதி வழங்குவர். பட்டாசு கடைகளில் 1500 கிலோவிற்கு மேல் விற்பனை செய்ய வேண்டுமானால் மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் வெடிப்பொருள் கட்டுப்பாட்டு துறையினரின் அனுமதி பெறுவதும் அவசியம்.
ஒரு பட்டாசு கடையில் 1500 கிலோ விற்க அனுமதி பெற்றால் அதில் சத்தம் எழுப்பக்கூடிய வெடிகள் 300 கிலோவும், பேன்ஸி ரகம், மத்தாப்பு உள்ளிட்டவை 1200 கிலோ வீதம் வைத்து விற்க அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் நிரந்தர பட்டாசு கடைகள் நடத்த உரிமம் பெற்றோர் கூடுதலாக வைத்து விற்பனை செய்கின்றனர்.
இதனை தவிர்க்கவும், உரிமம் பெற்றவரை தவிர்த்து மற்றவர்களுக்கு கடைகளை உள்வாடகைக்கு விடுவதை தடுக்கும் வகையில் உரிமம் பெற்றவரின் புகைப்படம் ஒட்டிய சான்றிதழ்கள், பெசோ வழங்கிய சான்றிதழ்களை பட்டாசு கடையின் முன் பொது மக்கள் காணும் வகையில் வைப்பது அவசியம் என தீயணைப்புத்துறை பட்டாசு கடை உரிமையாளர்களை எச்சரித்துள்ளது.