/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சுருளியாறு மின் நிலையத்தில் 24 மணி நேரமும் மின் உற்பத்தி செய்ய உத்தரவு

ADDED : பிப் 04, 2024 03:45 AM
கம்பம் : சுருளியாறு நீர் மின் நிலையத்தில் 24 மணி நேரமும் மின் உற்பத்தி செய்ய வாரியம் உத்தரவிட்டதை தொடர்ந்து 20 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் மின் நுகர்வு அதிகரித்துள்ளது. கோடை காலம் துவங்க உள்ளதால் மின் தேவை அதிகரித்து வருகிறது. மழை பெய்து பெரும்பாலான அணைகளில் முழு அளவில் நீர்மட்டம் இருப்பதால், மின் உற்பத்தியும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் 3 ஆண்டுகளாக பழுதாகி இருந்த சுருளியாறு மின் நிலையம் கடந்த வாரம் சீரமைத்து மின் உற்பத்தி துவங்கியது. இங்கு காலை, மாலை என பீக் ஹவர்சில் மட்டும் மின் உற்பத்தி அதுவும் தேவைக்கேற்ப நடைபெறும்.
தற்போது தேவை அதிகம் இருப்பதால் 24 மணி நேரமும் மின் உற்பத்தி செய்ய வாரியம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி இரவங்கலாறு அணையிலிருந்து 81 கன அடி நீர் விடுவிக்கப்பட்டு, 20 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
அணையில் போதிய அளவு தண்ணீர் இருப்பதால் மின் உற்பத்தி தொடர்ந்து நடைபெறும் என தெரிகிறது.