ADDED : டிச 31, 2024 06:49 AM
தேனி: இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள் பற்றிய விபரங்களை கணக்கெடுக்கும் பணி நடத்தப்பட்டு வருவதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேளாண் துறை சார்பில் இயற்கை விவசாயம் செய்ய விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கப்பட்டு வருகிறது. எந்த ஒரு செயற்கை உரங்கள், பூச்சி மருந்துகள் பயன்படுத்தாத விவசாயிகளுக்கு வேளாண் துறை சார்பில் அங்கக விவசாயி என்ற சான்று வழங்கப்படுகிறது. இவர்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு கூடுதல் விலையும் கிடைக்கிறது. வேளாண் துறையினர் கூறுகையில், 'ஒவ்வொரு மாவட்டத்திலும் இயற்கை முறையில் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் பற்றியும், சாகுபடி பரப்பு பற்றியும் கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்தாண்டிற்கான பட்ஜெட்டில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகின்றது', என்றனர்.