/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேர்தலையொட்டி ரவுடிகள் கண்காணிப்பில் போலீஸ் தீவிரம் உறுதிமொழி பத்திரம் பெற ஏற்பாடு

ADDED : மார் 06, 2024 04:36 AM
தேனி, : லோக்சபா தேர்தலை முன்னிட்டு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகளை கண்காணிக்கும் பணியை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் அவர்களிடம் உறுதிமொழி பத்திரம் பெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
லோக்சபா தேர்தல் தொடர்பாக பிரச்னைக்குரிய ஓட்டுச்சாவடி மையங்களை கண்டறியும் பணிகள் நடந்து வருகிறது. அதைத்தொடர்ந்து ஸ்டேஷன்வாரியாக குற்ற வழக்ககளில் தொடர்புடையவர்களை கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் படி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட ரவுடிகளில் தினமும் 2 முதல் 4 பேரை போலீசார் கண்காணிக்கவும். குறிப்பிட்ட சில ரவுடிகளை ஆர்.டி.ஓ., முன் ஆஜர்படுத்தி, 6 மாதத்திற்கு எந்த குற்றங்களில் ஈடுபட மாட்டேன் என உறுதி மொழி பத்திரத்தில் கையெழுத்து வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு சப் டிவிஷனுக்கும் இப்பணிகளை கவனிக்க ஒரு இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தேர்தல் பிரசாரம், ஓட்டுப்பதிவில் இடையூறு ஏற்படுத்த கூடிய ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.