/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அவுட் போலீஸ் ஸ்டேஷன் திறக்க வலியுறுத்தல்
/
அவுட் போலீஸ் ஸ்டேஷன் திறக்க வலியுறுத்தல்
ADDED : ஜன 15, 2024 12:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி : பொம்மிநாயக்கன்பட்டியில் செயல்பட்டு வந்த அவுட் போலீஸ் ஸ்டேஷன் திறக்கப்படாமல் பூட்டி கிடக்கிறது.
பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் எல்கைக்கு உட்பட்ட பொம்மி நாயக்கன்பட்டி ஊராட்சியில் அவுட் போலீஸ் ஸ்டேஷன் செயல்பட்டு வந்தது. தினமும் 3 போலீசார் சுழற்சி முறையில் பணியில் இருந்தனர். இதனால் பொம்மிநாயக்கன்பட்டி, உட்கடை கிராமங்களில் இரவு ரோந்து போலீஸ் சென்று வந்ததால் தோட்டங்களில் மின் மோட்டார் உட்பட திருட்டு சம்பவங்கள் குறைந்து இருந்தது. இதனால் தற்போது சில பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஜெயமங்கலம் போலீசார் அவுட் போலீஸ் ஸ்டேஷனை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.