/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அதிக எடையில் பனம் பழங்கள் பனை ஆர்வலர்கள் மகிழ்ச்சி
/
அதிக எடையில் பனம் பழங்கள் பனை ஆர்வலர்கள் மகிழ்ச்சி
அதிக எடையில் பனம் பழங்கள் பனை ஆர்வலர்கள் மகிழ்ச்சி
அதிக எடையில் பனம் பழங்கள் பனை ஆர்வலர்கள் மகிழ்ச்சி
ADDED : நவ 21, 2024 05:14 AM

போடி: போடி அருகே பனம் பழம் 3.200 கி.கி., எடையில் கிடைத்து பனை ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மருத்துவ குணம் வாய்ந்த பனம் பழத்தை நெருப்பில் சுட்டு, அதன் சதை பகுதியை சாப்பிடலாம். மாவட்டத்தில் 2 லட்சம் பனை விதைகளை நடவு செய்ய மாவட்ட நிர்வாகம் இலக்கு நிர்ணயித்து பணிகள் நடந்து வருகிறது.
போடி அருகே சிலமலையை சேர்ந்த பசுமை பங்காளர் அமைப்பின் நிறுவனர் பனைமுருகன். ஓராண்டுக்கு மேலாக பனை விதைகள் சேகரிப்பில் ஈடுபட்டுளளார். மாணவர்களுக்கு பனை விதை நடவு குறித்து பயிற்சி அளித்து வருகிறார். என்.எஸ்.எஸ்., மாணவர்கள், தி கிரீன் லைப் பவுண்டேஷன் நிர்வாகிகளுடன் இணைந்து கண்மாய், ரோட்டின் ஓரங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பனை விதைகளை நடவு செய்துள்ளார். பனம் பழம் குறைந்தது 200 கிராம் முதல் ஒரு கிலோ எடை இருக்கும்.
கடந்த வாரம் பொட்டிபுரம் கரடு பகுதியில் பனை விதை சேகரிப்பில் ஈடுபட்ட பனை முருகனுக்கு தலா 3.100 முதல் 3.200 கி.கி., எடையில் 10க்கும் மேற்பட்ட பனம் பழங்கள் கிடைத்தது.
அதிக எடையில் பனம் பழங்கள் கிடைத்ததால் பனை ஆர்வலர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.