/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சிறுவனை முறுக்கு கம்பெனிக்கு விற்றவர் உரிமையாளருக்கு பத்தாண்டுகள் சிறை
/
சிறுவனை முறுக்கு கம்பெனிக்கு விற்றவர் உரிமையாளருக்கு பத்தாண்டுகள் சிறை
சிறுவனை முறுக்கு கம்பெனிக்கு விற்றவர் உரிமையாளருக்கு பத்தாண்டுகள் சிறை
சிறுவனை முறுக்கு கம்பெனிக்கு விற்றவர் உரிமையாளருக்கு பத்தாண்டுகள் சிறை
ADDED : நவ 20, 2025 04:04 AM

தேனி: தேனியில் 15 வயது சிறுவனை ஏமாற்றி கர்நாடகா பெங்களூரு முறுக்கு கம்பெனியில் வியாபாரியிடம் ரூ.5ஆயிரத்திற்கு விற்ற சின்னமனுார் சாமிகுளத்தை சேர்ந்த முருகன் 55, கம்பெனியின் உரிமையாளர் மதுரை உசிலம்பட்டி கன்னியம்பட்டியை சேர்ந்த பாண்டி 55, ஆகிய இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
தேனியை சேர்ந்த ஆறாம் வகுப்பு படித்த 15 வயது பள்ளி மாணவர். இச்சிறுவனை காணவில்லை என பெற்றோர் தேனிபோலீசில் 2017 பிப்., ல் புகார் அளித்தனர். தேனி போலீசார் விசாரித்தனர். மகனை கண்டு பிடிக்காததால் பெற்றோர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் தேனி சி.பி.சி.ஐ.டி., போலீசார் சிறுவனை கண்டறிய உத்தரவிட்டது.
தேனி சி.பி.சி.ஐ.டி., டி.எஸ்.பி., சரவணன்,இன்ஸ்பெக்டர் சித்ராதேவி தலைமையிலான போலீசார் 2017 டிச., வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில் சின்னமனுார் சாமிகுளத்தை சேர்ந்த முருகன் 55, சிறுவனை கர்நாடகா,பெங்களூருவில் உள்ள முறுக்கு கம்பெனிக்கு அழைத்து சென்று அங்குள்ள மதுரை உசிலம்பட்டி கன்னியம்பட்டியை சேர்ந்த பாண்டியிடம் 55, ரூ.5 ஆயிரம் பணம் வாங்கிக் கொண்டு, எனது தங்கை மகன் என கூறி கொத்தடிமையாக கூலி வேலைக்கு விட்டார். இதனை கண்டறிந்த போலீசார் பாண்டி, முருகனை கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று விசாரணை முடிந்து, முருகன், பாண்டி இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை, ரூ.1.19 லட்சம் அபராதம் விதித்து, பொறுப்பு நீதிபதி அனுராதா தீர்ப்பளித்தார்.

