/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தவறாக பூர்த்தி செய்த வாக்காளர் படிவங்களால் பி.எல்.ஓ.,க்கள் தவிப்பு
/
தவறாக பூர்த்தி செய்த வாக்காளர் படிவங்களால் பி.எல்.ஓ.,க்கள் தவிப்பு
தவறாக பூர்த்தி செய்த வாக்காளர் படிவங்களால் பி.எல்.ஓ.,க்கள் தவிப்பு
தவறாக பூர்த்தி செய்த வாக்காளர் படிவங்களால் பி.எல்.ஓ.,க்கள் தவிப்பு
ADDED : நவ 20, 2025 04:03 AM
தேனி: வாக்காளர் சிறப்பு திருத்த பணிக்கு வழங்கப்பட்ட படிவங்களை வாக்காளர்கள் பலர் தவறாக பூர்த்தி செய்து வழங்கி உள்ளதால் முழுவிபரம் இன்றி பதிவேற்ற முடியாமல் பி.எல்.ஓ.,க்கள், சூப்பர்வைசர்கள், அலுவலர்கள் திணறி வருகின்றனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் நவ.,4ல் துவங்கியது. வாக்காளர் விபரம் அச்சிட்ட இரு படிவங்கள் வழங்கப்பட்டது. அதில் வாக்காளரின் விபரம், பெற்றோர் விபரங்கள், 2002 சிறப்பு திருத்தத்தின் போது வாக்காளர்பட்டியலில் இடம் பெற்றிருந்தால் அதன் விபரங்கள் பூர்த்தி செய்து வழங்க கோரப்பட்டுள்ளது. ஆனால், அந்த படிவங்களில் முதல் பாதியை சரியாக பூர்த்தி செய்து மற்றொரு பகுதியை பெரும்பாலானவர்கள் தவறுதலாக பூர்த்தி செய்து வழங்கி உள்ளனர்.
வாக்காளர்கள் வழங்கிய விவரங்களை அதற்கான பிரத்யேக செயலியில் பதிவேற்றம் செய்து 'டிஜிட்டலைஸ்' செய்யப்படுகிறது. இந்த பணி தாலுகா, நகராட்சி அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வாக்காளர்கள் சிலர் தவறாக தகவல்கள் வழங்கியதை கணினியில் பதிவேற்றும் போது கண்டறிகின்றனர். அதனை சரியான விபரம் பதிவேற்ற வாக்காளர்களை அலைபேசியில் தொடர்பு கொண்டால் முறையான பதில் கிடைப்பதில்லை. அதனால் சில படிவங்கள் பதிவேற்ற முடியவில்லை. அதிகாரிகளிடம் தெரிவித்தாலும் சரியான விளக்கம் இல்லை. வாக்காளர்கள் சிலர் தவறான தகவல்கள் வழங்கியதால் பதிவேற்ற முடியாமல் பி.எல்.ஓ.,க்கள், சூப்பர்வைசர்கள், அலுவலக பணியாளர்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். வாக்காளர்கள் படிவத்தை சரியாக பூர்த்தி செய்யுங்கள் அல்லது அதற்காக அமைக்கப்பட்டுள்ள உதவி முகாம்களை தொடர்பு கொண்டு படிவங்களை பூர்த்தி செய்யுமாறு வலியுறுத்தி உள்ளனர்.

