/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கூடலுாரில் நெல் கொள்முதல் நிலையம் துவக்கம்
/
கூடலுாரில் நெல் கொள்முதல் நிலையம் துவக்கம்
ADDED : மார் 18, 2025 05:40 AM

கூடலுார்: முல்லைப் பெரியாற்றின் தலைமதகுப் பகுதியான கூடலுாரில் 2 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் இருபோக நெல் சாகுபடி நிலங்கள் உள்ளன. இதில் இரண்டாம் போக நெல் அறுவடை ஒழுகு புளி, வெட்டுக்காடு, கப்பாமடை பகுதிகளில் துவங்கியுள்ளது.
இந்நிலையில் அரசு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மண்ணெண்ணெய் பங்க் அருகே வேளாண் விளைபொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க கட்டடத்தில் நேற்று துவக்கப்பட்டது.
கொள்முதல் நிலைய அலுவலர்கள், நீரினை பயன்படுத்துவோர் சங்க நிர்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர். விவசாயிகள் அறுவடை செய்யப்படும் நெல்லை கொள்முதல் நிலைகளில் விற்பனை செய்து பயன்பெறுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.