/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நெல் கொள்முதல் நிலையம் கூடலுாரில் திறப்பு
/
நெல் கொள்முதல் நிலையம் கூடலுாரில் திறப்பு
ADDED : அக் 29, 2025 09:27 AM

கூடலுார்:  கூடலுாரில் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஒட்டான்குளம், ஒழுகுபுளி, பாறவந்தான், கப்பாமடை, தாமரைக்குளம், வெட்டுக்காடு உள்ளிட்ட பகுதிகளில் நெல் இரு போக நெல் விவசாயம் நடைபெறுகிறது. இதில் முதல் போக நெல் சாகு படிக்கான அறுவடை பணிகள் துவங்கியுள்ளன. கோ 509, ஆர்.என்.ஆர்., உள்ளிட்ட ரக நெற்பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது.
அறுவடை துவங்கியவுடன் அரசு நெல் கொள்முதல் நிலையம் துவக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று அரசமரம் பஸ் ஸ்டாப் அருகே வேளாண் விளை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான கட்டடத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்கப்பட்டது.
விவசாயிகள் தங்களது நெல்லை கொண்டு வந்து விற்பனை செய்து பயன்பெறுமாறு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

