/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மூன்று இடங்களில் நெல் கொள்முதல் நிலையம்
/
மூன்று இடங்களில் நெல் கொள்முதல் நிலையம்
ADDED : அக் 19, 2025 09:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மாவட்டத்தில் மூன்று இடங்களில் நாளை (அக்.21) முதல் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பாட்டிற்கு வர உள்ளதாக வேளாண் துறையினர் தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது: கம்பம், சின்னமனுார், உத்தமபாளையம் பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் வலியுறுத்தி இருந்தனர். கலெக்டர் ரஞ்ஜீத்சிங் உத்தரவில் கம்பம், சின்னமனுார், உத்தமபாளையம் ஆகிய மூன்று இடங்களில் நாளை (அக்.,21ல்) முதல் நெல் கொள்முதல் நிலையங்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
நிலையம் அமைப்பதற்கான பணிகளை நுகர்பொருள் வாணிப கழகத்துடன் இணைந்து மேற்கொண்டு வருகிறோம்., என்றனர்.