ADDED : அக் 19, 2025 09:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு: தமிழகம் திருப்பூர் அருகே பி.என்.ரோட்டில் செயல்பட்டு வரும் டெக்ஸ்டைல் நிறுவனத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மூணாறுக்கு வேனில் சுற்றுலா வந்தனர். அவர்கள் நேற்று மாங்குளம் பகுதிக்கு சென்றபோது விரிபாறை பகுதியில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த, வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது.
அதில் சக்தி 33, ஷாலினி 8, வேதாஸ்ரீ 4, முத்துகிருஷ்ணன் 57, சந்திரசேகரன் 40, கோகிலா 29, ஜீவிதா 35, கீதா 27, சரண்யா 28, ஜோதிமணி 54, விமல் 35, சித்ரா 48 உள்பட 24 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
அடிமாலி தாலுகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின் தேனி மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.