/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பத்மாக் ஷி புதிய பட்டு சேலை அறிமுக விழா
/
பத்மாக் ஷி புதிய பட்டு சேலை அறிமுக விழா
ADDED : ஆக 19, 2025 12:43 AM
தேனி; தேனி ஸ்ரீகணபதி சில்க்ஸ் நிறுவனத்தின் பத்மாக் ஷி புதிய பட்டு சேலையின் அறிமுக விழா தேனி ஷோரூமில் நடந்தது. சிறப்பு விருந்தினர்கள், வாடிக்கையாளர்கள் குத்துவிளக்குஏற்றி துவக்கி வைத்தனர்.
தேனி அல்லி நகரம் நகராட்சித் தலைவர் ரேணுப்பிரியா பத்மாக் ஷி புதிய சேலையை அறிமுகம் செய்து வைத்தார். தேனி மாவட்ட வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் செல்வக்குமார், புதிய சேலையின் பெயரை அறிமுகம் செய்தார்.
தமிழ்நாடு - புதுச்சேரிமாநில வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் நிர்வாகி வழக்கறிஞர் முத்துராமலிங்கம் முதல் விற்பனையை துவக்கி வைக்க, நகராட்சித் தலைவர் பெற்றுக் கொண்டார்.
புதிய பட்டுச் சேலை மற்றும் ஜவுளி ரகங்களை வாடிக்கையாளர்கள் வாங்கிச் சென்றனர்.

