ADDED : ஏப் 24, 2025 06:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி நேருசிலை அருகே பா.ஜ., மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் தலைமையில் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மோட்சதீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர். கட்சினர் திடீரென பாக்கிஸ்தான் தேசிய கொடி, அந்நாட்டின் ராணுவ தளபதியின் புகைப்படங்களை தீயிட்டு கொழுத்தினர்.
இதனை அப்பகுதியில் நின்றிருந்த போலீசார் தடுத்தனர்.
மேலும் எரிப்பதற்காக வைத்திருந்த உருவ பொம்மையை போலீசார் பறித்து சென்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் கட்சியினர் கலைந்து சென்றனர்.