/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பழனிசெட்டிபட்டி மேம்பாலப்பணி போக்குவரத்தை சீரமைத்த போலீசார் நீண்ட வரிசையில் காத்திருந்த வாகனங்கள்

ADDED : டிச 28, 2024 08:05 AM

தேனி :   பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் இரும்பு நடை மேம்பாலம் அமைக்கும் பணியால் போக்குவரத்து மாற்றப்பட்டது. இதனால் நேற்று கடும் போக்குவரத்து நெருக்கடியை  போலீசார் வாகனங்களைசீரமைத்து அனுப்பினர்.
இப்பேரூராட்சியில் பழனியப்பா பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் மேற்கு முதல் கிழக்கு நோக்கி ரோட்டின் நடுவே பாதசாரிகள் செல்லும் அளவில் இரும்பு மேம்பாலம் அமைக்கப்பட்டது.
இதற்காக  நேரு சிலைவழியாக போடி கம்பம் செல்லும் இலகு ரக வாகனங்கள் பூதிப்புரம் விலக்கு வழியாக சென்று, திண்டுக்கல் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் செல்ல வேண்டும். மறுமார்க்கத்தில் வரும் இலகு ரக வாகனங்கள் இதே வழியைபயன்படுத்தலாம். கனரக வாகனங்கள் பஸ்கள் நேரு சிலையில் இருந்து பெரியகுளம் ரோடு, அன்னஞ்சி பைபாஸ் ரோட்டை அடைந்து கம்பம், போடி செல்ல வேண்டும். மறு மார்க்கத்தில் இதே வழியாக வர வேண்டும்.இந்த போக்குவரத்து மாற்றம் டிச.27 அன்று காலை முதல் இரவு வரை அமலில் இருக்கும் என கலெக்டர் தெரிவித்திருந்தார். நேற்று பூதிப்புரம் விலக்கில் வாகனங்கள் கம்பம் ரோட்டில் செல்லாத வகையில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சஜூக்குமார் தலைமையிலான போலீசார் இரும்பு தடுப்பு (பேரிகார்டுகள்) அமைத்து, இலகு ரக வாகனங்களை பூதிப்புரம் வழியாக செல்ல அனுமதித்தனர். இந்நிலையில் பூதிப்புரம் ரோட்டில் இருந்து வந்த வாகனங்களை நிறுத்தி, நிறுத்தி அனுப்பினர். இதனால் வாகனங்கள் நின்று சிறுது நேரம் கழித்து சென்றன. பாலத்தில் வாகனங்கள் வரிசையாக நின்றன. போலீசார் சீரமைப்புக்குப் பின் வாகனங்கள் மாற்றுப்பாதையில்   சென்றன.