/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விவசாயிகளை அலைக்கழிக்கும் பழனிசெட்டிபட்டி போலீசார் எஸ்.பி., அலுவலகத்தில் கிராமத்தினர் மனு

ADDED : அக் 13, 2024 05:27 AM
தேனி: பூதிப்புரம், அதனை சுற்றி உள்ள பகுதிகளில் ஆடு, கோழி, மோட்டார் உள்ளிட்டவை அதிகளவில் திருடு போகிறது. இது தொடர்பாக பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளித்தால், விவசாயிகளை அலைக்கழிப்பதாக எஸ்.பி., அலுவகத்தில் கிராமத்தினர் மனு அளித்தனர்.
பூதிப்புரம், வாழையாத்துப்பட்டி, ஆதிபட்டி, மஞ்சிநாயக்கன்பட்டி, கெப்புரெங்கன்பட்டி, வலையபட்டியை சேர்ந்த ஆறு ஊர் கிராம நலக்கமிட்டி தலைவர் காந்தசொரூபன் தலைமையில் எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்தனர். மனுவில், எங்கள் கிராமங்களில் ஆடுகள், மாடுகள், கோழிகள், விவசாய நிலத்தில் உள்ள மோட்டார்கள், வயர்கள் தொடர்ந்து திருடப்பட்டு வருகிறது. இதனை கண்காணிக்க கேமரா பொருத்தினோம். அதனையும் திருடி செல்கின்றனர். இதுபற்றி பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. விவசாயிகள், பொதுமக்களை அலட்சியப்படுத்தி, அலைக்கழிக்கின்றனர். பூதிப்புரம் பகுதியில் சட்டவிரோத மதுவிற்பனை, திருட்டு அதிகரித்துள்ளது. கிராமப்பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர். கமிட்டி நிர்வாகிகள் நடராஜன், சுருளிராஜ், ஆலோசகர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.