/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆண்டிபட்டியில் பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு
/
ஆண்டிபட்டியில் பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு
ADDED : செப் 05, 2025 02:45 AM
ஆண்டிபட்டி: அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று ஆண்டிபட்டி தொகுதியில் பிரசாரம் செய்ய வந்தார். அவருக்கு தேனி மாவட்ட அ.தி.மு.க.,வினர் திரண்டு வரவேற்பு அளித்தனர்.
'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என தொகுதிவாரியாக பொதுமக்களை சந்தித்து பிரசாரம் செய்து வருகிறார். 4ம் கட்ட பயணமாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டிக்கு நேற்று இரவு அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி வந்தார்.
அவருக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்கோடை ராமர், கொள்கைபரப்பு துணைச்செயலாளர் ரதிமீனா சேகர், ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர்கள் லோகிராஜன், வரதராஜன், ஆண்டிபட்டி நகர் செயலாளர் அருண்மதி கணேசன் உட்பட பலர் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர். இதில் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.