/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்டத்தில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்
/
மாவட்டத்தில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்
ADDED : ஏப் 14, 2025 06:19 AM

தேனி: மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த குருத்தோலை ஞாயிறு ஊர்வலத்தில் கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்றனர். தொடர்ந்து நடந்த திருப்பலியில் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.
தேனி மதுரை ரோடு உலக மீட்பர் சர்ச் சார்பில் பங்களா மேட்டில் இருந்து சர்ச் வரை குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் பாதிரியார் முத்து தலைமையில் நடந்தது.
உதவி பாதிரியார்கள் மார்டீன் லுாதர், சின்னப்பராஜ் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தை தொடர்ந்து நடந்த திருப்பலியில் ஊஞ்சாம்பட்டி, பாரஸ்ட்ரோடு, தேனி நகர் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கிறிஸ்துவர்கள் பங்கேற்றனர்.
தேனி என்.ஆர்.டி., நகர் சி.எஸ்.ஐ., பரிசுத்த பவுல் சர்ச் சார்பில் சர்ச் அருகே துவங்கிய ஊர்வலத்திற்கு சபைகுரு அஜித் ஸ்டேன்லி தலைமை வகித்தார். ஊர்வலம் பெரியகுளம் ரோடு, பழைய ஜி.ஹெச். ரோடு, சமதர்மபுரம் வழியாக மீண்டும் சர்ச் முன் நிறைவடைந்தது.
தொடர்ந்து மற்றொரு சபைகுரு நத்தனியேல் திருப்பலி நடத்தினார். இதில் தேனி, சமதர்மபுரம், அல்லிநகரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.